இஸ்லாமியர் இளைஞர்கள் சங்கம்

PEACE PERSEVERANCE POWER

Sunday 18 September 2011

உள்ளாட்சித் தேர்தலுக்கான சின்னங்கள்


சென்னை, செப். 18: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான சின்னங்களை மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தேர்தல் நடைமுறைகளில் ஒன்றாக மாநிலத் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அந்தக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதைப்போல தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் பட்டியலையும், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோருக்கான சுயேச்சை சின்னங்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், அவற்றின் சின்னங்கள்: (சின்னங்கள் அடைப்புக்குறிக்குள்)இந்திய தேர்தல் ஆணையத்தால் தேசியக் கட்சியாகவோ, அல்லது மாநிலக் கட்சியாகவோ அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாகக் கருதப்படுகின்றன.

1. அதிமுக (இரட்டை இலை), 2. பகுஜன் சமாஜ் கட்சி (யானை) 3. பாஜக (தாமரை) 4. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (தானியக் கதிர்களும் அரிவாளும்) 5.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சுத்தியும், அரிவாளும், நட்சத்திரமும்) 6. தேமுதிக (முரசு) 7. திமுக (உதயசூரியன்) 8. இந்திய தேசிய காங்கிரஸ் (கை) 9. தேசியவாத காங்கிரஸ் (கடிகாரம்) 10. பாமக (மாம்பழம்)

பதிவு செய்யப்பட்ட-அங்கீகரிக்கப்படாத கட்சிகள்: மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், அகில இந்திய சமத்துவ கட்சி, புதிய தமிழகம், இந்திய குடியரசுக் கட்சி, புதிய நீதிக்கட்சி, எம்.ஜி.ஆர்.கழகம், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம், ஜனதா கட்சி உள்ளிட்ட 154 கட்சிகள் இந்தப் பட்டியலில் உள்ளன. 

சுயேச்சை சின்னங்கள்: மாநகராட்சி மேயர், நகராட்சி, மூன்றாம்நிலை நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிக்குப் போட்டியிடுவோருக்கான சின்னங்கள்: 
 பதக்கம், கோட்டை, கேரம்போர்டு, கணிப்பொறி, மேசை மின்விசிறி, சீத்தாப்பழம், பேருந்து, குறுக்காக உள்ள இருகூர்வாள்கள், கோப்பையும் தட்டும், பளு தூக்குதல், சட்டை, சட்டைமாட்டி, ரயில் தண்டவாளம், பற்றுக்குறடு, சிறுபெட்டி, லென்சு கண்ணாடி, மட்டை, இரட்டை நாகஸ்வரம், கை பம்பு, பெல்ட், மை எழுதுகோல், சாய்வு மேசை, கைக் கடிகாரம், மைக்கூடு, வளையல்கள், பேட்டரி விளக்கு, பூந்தொட்டி, நீள மர இருக்கை, புத்தகம், டிஷ் ஆன்டனா.

மாநகராட்சி, நகராட்சி, மூன்றாம் நிலை நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய கவுன்சில் உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுவோருக்கான சின்னங்கள்: 
கிட்டார், பேட்ஜ், மறைதிருக்கி, வைரம், உலக உருண்டை, முகம் பார்க்கும் கண்ணாடி, அசைந்தாடும் நாற்காலி, புட்டி, ஊஞ்சல், நீளக்குவளை, சாலை உருளை, பூப்பந்து மட்டை, திருகு ஆணி, கோட்டு, கோப்பு அடுக்கும் அலமாரி, முள்கரண்டி, கெட்டில், ஹாக்கி மட்டையும் பந்தும், மகளிர் பணப்பை, மேசை விளக்கு, கொம்பு, கைப்பை, தீப்பெட்டி, கழுத்தில் கட்டும் டை, அலமாரி, குலையுடன் கூடிய தென்னை மரம், அரிக்கேன் விளக்கு, கரண்டி, தண்ணீர்க் குழாய், உலாவுவதற்கான தடி.சிற்றூராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவோருக்கான சின்னங்கள்: பூட்டு மற்றும் சாவி, கத்திரிக்கோல், கை உருளை, ஏணி, மூக்குக் கண்ணாடி, கத்திரிக்காய், விமானம், கிணறு, மண்வெட்டி, பானை, தேங்காய் மூடிகள், மின்விளக்கு, மேசை, செல்போன், தொப்பி, திராட்சைக் கொத்து, வாழைப்பழம், ஹார்மோனியம், மின்விசிறி, சூரியகாந்திப் பூ, விளக்குக் கம்பம், ஹெலிகாப்டர், தையல் இயந்திரம், லாரி, பிளாஸ்க், சன்னல், மணிமாலை, சிலேட், ஸ்டூல், கரும்பலகை.

சிற்றூராட்சி உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுவோருக்கான சின்னங்கள்: 
திறவுகோல், சீப்பு, கட்டில், கார், சங்கு, பெயின்ட் பிரஷ், வானொலிப் பெட்டி, அஞ்சல்பெட்டி, ஸ்கூட்டர், தொலைபேசி, அன்னாசிப்பழம், நாற்காலி, கோப்பை, ரயில் எஞ்சின், பந்து, மோதிரம், வாளி, கண்ணாடி குடுவை, பட்டம், சுத்தி, சாக்லெட், குடிசை, சைக்கிள் ரிக்ஷா, மக்காச்சோளம், மாவரைக்கும் திரிகை, படகு, சாப்பாட்டுத் தூக்கு, சிம்னி விளக்கு, மரம், வண்டி.

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் விரும்பும் சின்னங்களைக் கோரும் முறை: 
1. சுயேச்சை வேட்பாளர் அவர் போட்டியிடும் பதவிக்காக ஒதுக்கப்பட்டுள்ள சுயேச்சை சின்னங்கள் பட்டியலில் இருந்து தான் விரும்பும் முன்னுரிமை வரிசைப்படி மூன்று சின்னங்களைப் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட வேண்டும்.
2. பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத கட்சியின் சார்பில் நிற்கும் வேட்பாளர் அவர் விரும்பும் சின்னங்களை கட்சி அடிப்படையிலான தேர்லுக்கான சின்னங்களின் பட்டியலில் இருந்தும் ஒருங்கிணைந்தவாறு தேர்ந்தெடுத்துக் குறிப்பிடலாம். 

சின்னங்கள் ஒதுக்கீடு முறை 
வேட்பாளர் கோரிய முன்னுரிமை வரிசையின் அடிப்படையில் சின்னங்கள் ஒதுக்கீடு செய்ய பரிசீலிக்கப்படும்.

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்கப்பட்ட பின்னரே சுயேச்சை வேட்பாளருக்கு மீதமுள்ள சுயேச்சை சின்னங்கள் ஒதுக்கப்படும்.

ஒரே ஒருவரால் மட்டுமே முதல் தேர்வாக ஒரு சுயேச்சை சின்னம் கோரப்பட்டால், அந்தச் சின்னம் முதலில் கோரியவருக்கே ஒதுக்கீடு செய்யப்படும். பிறருக்கு ஒதுக்கீடு செய்யப்படமாட்டாது.
ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் தங்கள் முதல் தேர்வாக ஒரே சின்னத்தைக் கோரியிருந்தால், அந்தச் சின்னம் குலுக்கல் முறையில் ஒருவருக்கு ஒதுக்கப்படும்.

வேட்பாளர் கோரிய முதல் விருப்பச் சின்னம் அவருக்கு ஒதுக்கீடு செய்ய இயலாது போனால், இரண்டாவது கோரிய சின்னம் பரிசீலிக்கப்படும். இரண்டாவது சின்னமும் பலரின் கோரிக்கைகளினால் ஒதுக்கீடு செய்ய முடியாமல் போனால் மூன்றாவது விருப்பச் சின்னம் பரிசீலிக்கப்படும். 

மூன்றாவதாக கோரிய சின்னமும் ஒதுக்கீடு செய்ய முடியாமல் போனால் பிற வேட்பாளர்களுக்கு ஒதுக்கியதுபோக மீதமுள்ள சுயேச்சை சின்னங்களில் ஒன்று குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு ஒதுக்கப்படும்.

Wednesday 3 August 2011

JAMIYA MASJID - KOTTAKUPPAM


Friday 8 July 2011

ஹெட்லைன்ஸ் டுடே ஒளிபரப்பிய இலங்கையின் கொலைக்களம்- இந்தியாவில் முதல் முறையாக ஒளிபரப்பாகியது....!

சென்னை: இந்தியாவிலேயே முதல் முறையாக இலங்கையின் கொலைக்களம் என்ற பெயரில் லண்டனின் சேனல் 4 தொலைக்காட்சி தயாரித்த டாக்குமென்டரிப் படம் நேற்று ஹெட்லைன்ஸ் டுடே டிவியில் ஒளிபரப்பாகியது.

இதயமே இல்லாத மனிதர்கள் கூட பார்த்ததும் கலங்கிப் போய் விடுவார்கள் இந்தக் கோரக் காட்சிகளை. கொடூர மனம் படைத்த ஹிட்லரும், இதயமே இல்லாத இடி அமீனும் கூட இலங்கை என்றாலே வெறுத்துப் போய் விடுவார்கள் இந்தக் காட்சிகளைப் பார்த்தால். அப்படி ஒரு வலி மிகுந்த உதிரம் சிந்திய போராட்டத்தின் முடிவைத்தான் லண்டன் சானல் 4 தொலைக்காட்சி நிறுவனம், காட்சிகளாக தொகுத்து உலக மக்களின் பார்வைக்கு வைத்து நியாயம் வேண்டி நின்றது.

உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் குறைந்தது ஒரு முறையாவது இந்த கோரக் காட்சிகளைப் பார்த்து கண்ணீர் வடித்திருப்பார்கள். தமிழர்கள் அல்லாத எத்தனையோ லட்சம் வெளிநாட்டவரும் கூட இதைப் பார்த்து கலங்கியிருப்பார்கள். ஆனால் நொய்டாவில் கழுதை செத்துக் கிடந்தால் விடிய விடிய, தொண்டை வலிக்க நியூஸ் வாசித்து கூக்குரல் போடும் ஆங்கில மீடியாக்கள் மட்டும் இந்த டாக்குமென்டரிப் படத்தைப் பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மனிதாபிமானத்தை உலகுக்குப் போதித்த நாட்டில் தான் இந்த நிலை.

இந்த நிலையில் அத்திப் பூ போல ஹெட்லைன்ஸ் டுடே டிவி இந்த டாக்குமென்டரியை சானல் 4 நிறுவனத்திடமிரு்ந்து வாங்கி நேற்று ஒளிபரப்பியது. அதேசமயம், இந்த டாக்குமென்டரிப் படம் குறித்து கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து செய்திகளையும் ஒளிபரப்பி வந்தது.

இலங்கையில் நடந்தேறிய அந்த அகோரமான இனப்படுகொலை குறித்த இந்த டாக்குமென்டரிப் படத்தைப் பார்த்த யாருமே நிச்சயம் சாப்பிடிருக்க மாட்டார்கள். அப்படி ஒரு அவலம்அந்தக் காட்சிகளில். பெண்களை கொடூரமாக கற்பழித்த கதைகள், தமிழர்களை ஈ எறும்பு போல கருதி இலங்கை ராணுவத்தினர் நடத்திய கொடுமை, இளைஞர்களையும், சிறுவர்களையும் கூட கொடூரமாக கொன்று குவித்த அவலம், மருத்துவமனைகளை குறி வைத்து குண்டு வீசி நடத்திய அட்டூழியம், தமிழர்களை நிர்வாணப்படுத்தி கைகளை கட்டி, கண்களைக் கட்டி தலையில் சுட்டுக் கொன்ற அகோரம், இருக்கிற பீஸிலேயே இந்த பீஸ்தான் நல்லாருக்கு என்று நிர்வாணப்படுத்தி கொடூரமாக கற்பழித்துக் கொலை செய்யப்பட்ட பெண்ணைப் பார்த்து சிங்கள காடையர்கள் பேசிய அசிங்கமான வசனங்கள் என கண்ணீருக்குப் பதில் ரத்தத்தை வரவழைக்கும் காட்சிகள் நிறைந்த டாக்குமென்டரி.

இன்றும் நாளையும் கூட இந்த டாக்குமென்டரியை ஒளிபரப்புகிறது ஹெட்லைன்ஸ் டுடே. இன்று இரவு 11 மணிக்கும், நாளை இரவு 10 மணிக்கும் இந்த டாக்குமென்டரியைக் காணலாம்.

இலங்கை இனப் பிரச்சினை குறித்து தமிழகத்தைத் தாண்டி இந்திய மக்கள் யாருக்குமே சரியாக புரியாத நிலையே இன்று வரை உள்ளது. போர் நடந்தபோதும் சரி, முடிந்தபோதும் சரி, அங்கு நடந்த இனப்படுகொலைகளும் சரி இந்தியாவின் பெரும்பாலான பகுதி மக்களுக்கு இதுவரை புரியவே இல்லை அல்லது சரியாக போய்ச் சேரவில்லை.

ஆனால் ஹெட்லைன்ஸ் டுடே ஒளிபரப்பிய டாக்குமென்டரியை இந்தியாவின் அத்தனை பகுதி மக்களும் பார்த்திருப்பார்கள். கண் முன் கண்ட காட்சிகளைப் பார்த்த பிறகாவது இலங்கையில் நடந்த ஈனத்தனத்தின் அகோரத்தை அவர்கள் புரிந்து கொண்டிருப்பார்கள் என நம்பலாம். அல்லது குறைநத்து ஈழத் தமிழர்கள் மீது அனுதாபத்தையாவது அவர்கள் வெளிப்படுத்த இது உதவியிருக்கும் என்று எதிர்பார்ப்போம்.

Wednesday 15 June 2011

தமிழகத்தில் அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல்?

சென்னை: தமிழ்கத்தில் மாநகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் மாதம் தேர்தல் நடத்தப்படவுள்ளது.

இந்த உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக் காலம் வரும் அக்டோபர் 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து அதற்கு முன்பாகவே இந்த அமைப்புகளுக்கு தேர்தலை முடிக்க தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் தற்போது 10 மாநகராட்சிகள், 98 நகராட்சிகள், 3ம் நிலை நகராட்சிகள் 50, பேரூராட்சிகள் 561, 29 மாவட்ட பஞ்சாயத்துகள், 385 பஞ்சாயத்து யூனியன்கள், 12,618 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன.

சென்னை மாநகராட்சிக்கு பழைய வார்டுகள் அடிப்படையில் 155 வார்டுகளும்,விரிவுபடுத்தப்பட்ட மாநகராட்சி எல்லை அடிப்படையில் 200 வார்டுகளும் உள்ளன. இதனால் 155 வார்டுகள் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படுமா அல்லது 200 வார்டுகள் அடிப்படையில் தேர்தல் நடத்தப்படுமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இது தொடர்பான முடிவை தமிழக அரசு தான் எடுக்க வேண்டும்.

200 வார்டுகள் அடிப்படையில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமானால், அதற்கான சட்டத் திருத்தம் சட்டசபையில் கொண்டு வரப்பட வேண்டும். அடுத்த மாதம் கூடும் பட்ஜெட் கூட்டத் தொடரில் இதற்கான சட்டத் திருத்தம் கொண்டு வரப்படலாம் என்று தெரிகிறது.

தேர்தல் உரிய நேரத்தில் நடத்திட முடிவு செய்யப்பட்டுள்ளதால் இதற்கான அட்டவணை ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்று தெரிகிறது.

இந்தத் தேர்தல் தொடர்பாக தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். இக் கூட்டத்தில் தேர்தல் ஆணைய செயலாளர் சேவியர் கிறிசோநாயகம், நகராட்சி நிர்வாக இயக்குனர் செந்தில்குமார், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை இயக்குனர் உதயசந்திரன், சென்னை மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், பேரூராட்சி இணை இயக்குனர் ராஜன் துரை உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Tuesday 31 May 2011

செளதியில் வெளிநாட்டினர் 6 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்ற தடை வருகிறது!

 ரியாத்: செளதி அரேபியாவில் 6 ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்து பணியாற்றத் தடை விதிக்க அந் நாடு திட்டமிட்டுள்ளது. இதனால் லட்சக்கணக்கான இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.

இது குறித்து செளதியின் அல் வதான் செய்தித் தாளுக்கு அந் நாட்டு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் அதெல் அல் பகி அளித்துள்ள பேட்டியில், செளதியில் உள்நாட்டினருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. வேலைவாய்ப்பைப் பெற உள்நாட்டினரிடையே போட்டியை உருவாக்கி, அவர்களது பணித் திறமையை ஊக்குவிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதனால் வெளிநாட்டினர் தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு மேல் செளதியில் பணியாற்ற தடை விதிக்கப்படும். இந்த சட்டத்தை கொண்டு வந்த பின், அதை அமலாக்க வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்தும் நிறுவனங்களுக்கு 5 மாத கால அவகாசம் வழங்கப்படும்.

கறுப்பு சந்தையில் உலவும் விசாக்களை 99 சதவீதம் கட்டுப்படுத்தவும் புதிய நடைமுறைகள் கொண்டு வரப்படும் என்றார்.

இந்த புதிய விதிமுறை அமலுக்கு வந்தால் பல லட்சம் இந்தியர்கள் பாதிக்கப்படுவர். இந்த ஆண்டு இறுதிக்குள் செளதி அரேபியாவில் உள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 20 லட்சத்தைத் தாண்டவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Saturday 21 May 2011

இஸ்லாமியர் இளைஞர்கள் சங்கம் சின்னம் வெளியீடு!


கோட்டகுப்பம்: இஸ்லாமியர் இளைஞர்கள் சங்கம் வெள்ளிக்கிழமை (20.05.2011) தங்களின் சின்னத்தை வெளியிட்டனர். இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்: கடின முயற்சிக்கு பிறகு அமைப்பின் சின்னத்தை வெளியிட்டுள்ளதாகவும், தொடர்ந்து ஊர் நலனுக்காகவும், சமுதாய நலனுக்காகவும் மற்றும் சமுக முன்னேற்றத்திற்க்காகவும் உழைதிடுவோம். சமுக முன்னேற்றத்திற்க்கு கல்வி முக்கியம் என்பதால், கல்வி விழிப்புணர்வு மற்றும் கல்வி சார்ந்த நல பணிகளை அமல்படுத்த திட்டமிட்டு வருகிறோம், விரைவில் இதை பற்றிய விவரம் வெளியிடுகிறோம் என்றனர்.
 

"PEACE - PERSEVERANCE - POWER" என்ற தங்களின் கொள்கையை விளக்குமாறு அமைதுள்ளது சின்னம்.
 
தமிழ் மொழிபெயர்ப்பு :

PEACE :
இஸ்லாம்
 
PERSEVERANCE :
கொண்ட இலட்சியத்திற்காக பல தடைகளை எதிர் கொண்டு தொடர்ந்து போராடுதல்

POWER :
பலம் (கொண்டு சாதித்தல்)


15 அடிக்கு 10 அடி அறையில் முடங்கியது கனிமொழியின் வாழ்க்கை!

டெல்லி: திஹார் சிறையில் 15 அடிக்கு 10 அடி அளவிலான அறையில் அடைக்கப்பட்டுள்ளார் திமுக ராஜ்யசபா எம்.பி. கனிமொழி. சொகுசான, வசதியான வாழ்க்கை வாழ்ந்து வந்த கனிமொழி தற்போது 150 அடி அளவேயான குறுகலான அறையில் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்.

சென்னை சிஐடி காலனியில் உள்ள அரண்மனை போன்ற வீட்டில் இருந்த கனிமொழி இவ்வளவு குறுகிய அறையில் அடைக்கப்பட்டிருப்பது அவரது குடும்பத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கனிமொழி திஹார் சிறையின் மகளிர் சிறைப் பிரிவில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்குத் தனி அறை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரிய அளவில் எந்த வசதியும் இல்லாத அறை அது.

43 வயதான கனிமொழியின் சிறை வாழ்க்கை குறித்த ஒரு பார்வை...

நேற்று மாலை திஹார் சிறைக்கு கனிமொழி கொண்டு செல்லப்பட்டார். கண்கலங்கிய நிலையில் பாட்டியாலா கோர்ட் லாக்கப்பிலிருந்து போலீஸ் வேனில் ஏற்றப்பட்டபோது அவர் மீண்டும் கலங்கினார்.

வேனில் அவருக்குப் பாதுகாப்பாக வந்த திஹார் சிறைக் காவலர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் இருந்தனர். அவர்கள் கனிமொழியுடன் தமிழில் பேசவே சற்று ஆறுதலடைந்தார் கனிமொழி. அவர்களுடன் தமிழில் உரையாடியபடி சிறைக்கு வந்து சேர்ந்தார்.

நீங்கள் எந்த ஊர், எப்போது முதல் இங்கு பணியாற்றுகிறீர்கள், டெல்லியில் வேலை எப்படி உள்ளது என்பது குறித்து கேட்டுக் கொண்டே வந்தாராம் கனிமொழி.

சிறைக்கு வந்து சேர்ந்தவுடன் அவருக்கு சிறை விதிமுறைகள் விளக்கிச் சொல்லப்பட்டது. அதை அவர் கவனத்துடன் கேட்டுக் கொண்டார். பின்னர் சிறை விதிமுறைகளின்படி சில ஆபரணங்களை அவர் கழற்றிக் கொடுத்து விட்டார். அவரது முகத்திற்கு அழகூட்டும் மூக்குத்தியும் அதில் ஒன்று.

மூக்குக் கண்ணாடி, சிறிய கைப்பை, சில புத்தகங்களை மட்டும் உடன் வைத்துக் கொள்ள அவர் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அவரை சிறைக் காவலர்கள் 8ம் எண் அறைக்குக் கொண்டு சென்று விட்டனர். அது மிகச் சிறிய அறை. அந்த அறையில் ஒரு கழிப்பறை மற்றும் படுத்துத் தூங்குதவற்காக ஒரு சிறிய மேடை போன்ற இடம் ஆகியவை மட்டும் உள்ளன.

கனிமொழியின் கண்ணியத்தைப் பாராட்டிய சிபிஐ நீதிபதி அவர் தொலைக்காட்சி வைத்துக் கொள்ளலாம், மின்விசிறி சலுகை தரலாம் என சில சலுகைகளை அறிவித்திருந்தார். அதன்படி கனிமொழி டிவி, செய்தித் தாள்களைப் பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மின்விசிறி வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறைக்குள்தான் தனது சிறை வாழ்க்கையை கழித்தாக வேண்டும் கனிமொழி. இங்கேயே குளித்துக் கொள்ளலாம். ஆனால் வாளியில் தண்ணீர் பிடித்து வைத்துக் கொண்டு குளித்துக் கொள்ளலாம். கழிப்பறை உள்ள பகுதியில்தான் அவர் குளிக்க வேண்டும். அதற்கும், தூங்கும் இடத்திற்கும் இடையே தடுப்பு ஏதும் கிடையாது. துணியால் மறைத்தபடி அதைப் பிரித்துக் கொள்ளலாம்.

கனிமொழி தென்னிந்திய உணவு வகைகளை வீட்டிலிருந்து கொண்டு வரும் உணவுகளை சாப்பிட நீதிபதி அனுமதித்துள்ளார். மருந்துகளையும் அவருக்குக் கொண்டு வந்து கொடுக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. எனவே வழக்கமான சாப்பாட்டை சாப்பிட கனிமொழிக்கு தடை இல்லை.

இருப்பினும் இவை தவிரகனிமொழிக்கென்று வேறு எந்த சிறப்புச் சலுகையும் தரப்பட மாட்டாது. வழக்கமான கைதிகளைப் போலவே அவர் நடத்தப்படுவார் என்று சிறையின் முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி சுனில் குப்தா கூறியுள்ளார். மேலும், அவருக்குப் பாதுகாப்பு தரப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

கனிமொழி விஐபி கைதி என்பதால் அவரைத் தாக்கி தங்களுக்கு பப்ளிசிட்டி தேடிக் கொள்ள சிலர் முயலலாம் என்பதால் அது நடந்து விடாமல் தடுக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது அறைக்கு முன்பு 24 மணி நேர பாதுகாப்பு தரப்படும் என்றும், கனிமொழியுடன் ஒரு பாதுகாவலர் எப்போதும் இருப்பார் என்றும் குப்தா கூறியுள்ளார்.

தனது அறை உள்ள பகுதியையொட்டியுள்ள அறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுடன் கனிமொழி பேசத் தடை இல்லை. அதேசமயம், ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைதாகி அடைக்கப்பட்டுள்ளவர்களுடன் பேச அவருக்கு அனுமதி கிடையாது.

கனிமொழி விசாரணைக் கைதி என்பதால் அவர் வழக்கமான உடைகளை அணிய அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.

நேற்று முதல் நாள் இரவை கனிமொழி நல்ல தூக்கத்தின் மூலம் கழித்தாராம். இரவு 11 மணிக்குத் தூங்கிய கனிமொழி காலை ஐந்தரை மணியளவில் எழுந்துள்ளார். கோர்ட்டுக்குக் கிளம்ப தயாரானார்.

நேற்று இரவும், இன்று காலையும் அவர் சிறையில் கொடுத்த உணவையே சாப்பிட்டுள்ளார்.

ஜாமீன் கிடைக்கும் வரை இந்த குறுகிய அறைக்குள்தான் கனிமொழி தங்கியிருக்க வேண்டும்.



நன்றி : thatstamil.com

Friday 13 May 2011

அதிமுக கூட்டணிக்கு 203 இடங்களில் அமோக வெற்றி-திமுக கூட்டணிக்கு 31

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் 160 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 147 தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது.

இந்தத் தேர்தலில் இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த தேர்தலில் மிக அதிக அளவாக 78.80 சதவீதம் வாக்குகள் பதிவாயின.

மொத்தமுள்ள 234 தொகுதிகளில் அதிமுக கூட்டணி 204 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.

160 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக 150 தொகுதிகளில் வென்றுள்ளது. ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்ட அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா 41,848 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

234 தொகுதிகளின் முடிவுகளும் நேற்று நள்ளிரவு வாக்கில் தெரிய வந்தன.

அதிமுக கூட்டணிக் கட்சிகள் வென்ற இடங்கள் (போட்டியிட்ட இடங்கள் அடைப்புக் குறிக்குள்):

அதிமுக- (160)- 150
தேமுதிக-(41)- 28
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் -(12)- 09
இந்திய கம்யூனிஸ்ட்- (10)- 08
மனிதநேய மக்கள் கட்சி- (03)- 02 

சமத்துவ மக்கள் கட்சி- (03)- 02
புதிய தமிழகம்- (03)- 02
கொங்கு இளைஞர் பேரவை- (01)- 01
இந்திய குடியரசு கட்சி- (01)- 01
பார்வர்டு பிளாக்- (01)- 01
சேதுராமனின் மூவேந்தர் முன்னணி கழகம்- (01)- 00

திமுக கூட்டணி 234 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 31 இடங்களில் தான் வென்றுள்ளது. திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் கருணாநிதி 50,249 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

திமுக கூட்டணிக் கட்சிகள் வென்ற இடங்கள் (போட்டியிட்ட இடங்கள் அடைப்புக் குறிக்குள்):

திமுக- (119)- 23
காங்கிரஸ்- (63)- 05
பாமக- (30)- 03
விடுதலை சிறுத்தைகள்- (10)- 00
கொங்கு முன்னேற்றக் கழகம்- (07)- 00
இந்திய யூனியன் முஸ்லீம் லீக்- (03)- 00
வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்றக் கழகம்- (01)- 00
பெருந்தலைவர் மக்கள் கட்சி- (01)- 00

பாஜகவும் படுதோல்வி:

193 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜகவும் அதனுடன் கூட்டணி அமைத்து 10 தொகுதிகளில் போட்டியிட்ட சுப்பிரமணிய சாமியின் ஜனதா கட்சி, 5 தொகுதிகளில் போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம் ஆகியவை ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

இதேபோல் 142 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய ஜனநாயகக் கட்சி, 25 தொகுதிகளில் போட்டியிட்ட புரட்சி பாரதம், 230 தொகுதிகளில் போட்டியிட்ட பகுஜன் சமாஜ் ஆகியவையும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

Tuesday 10 May 2011

கோட்டக்குப்பத்தில் மின் வாரியத்தை கண்டித்து தாமுமுக ஆர்பாட்டம், IIS பங்கேற்ப்பு!


கோட்டக்குப்பத்தில் மின் துறை மெத்தன போக்கில் செயல்படுகிறது. மேலும் கோட்டகுப்பம் மக்கள் மின் வாரியத்தால்  பல இடையுர்களுக்கு ஆளாகிறார்கள், சரியான மின்சார விநியோகம் இன்றி , தொடர் மின் தடைகள், மின் கட்டண வசூல் இழுத்தடிப்பு, கம்ப்யூட்டர் கொலற்படி செய்து அபராதம் விதித்தல், துணை மின் நிலையம் இல்லாமல் மின்சார பற்றாக்குறை. இதற்காக பல போரட்ட்களும் , பலர் சிறை சென்றும் பயன் இல்லாமலேயே இருக்கிறது. கடந்த வாரங்களில் மட்டும் பலமுறை மின் தடை மற்றும் மின் வாரியத்தால் பல பிரச்சனைகள். இதனை கண்டித்து நேற்று (09.05.2011) தாமுமுக சார்பில்  நடந்த ஆர்பாட்டத்தில் இஸ்லாமியர் இளைஞர்கள் சங்கம் (IIS) உறுப்பினர்கள் பங்கேற்று  ஆதரவளிதனர். இது குறித்து IIS தலைவர் Aziz  கூறுகையில் : "உறக்க ஒலித்தால் தான் ஊர் ஒளிரும்" , ' ஊர் நலனுக்காகவும் சமுக நலனுக்காகவும் குரல் கொடுப்போர்களுக்கு நாங்கள் என்றும் தோல் கொடுப்போம், அதன் அடிப்படையில் நாங்கள் இன்று தாமுமுக சார்பில்  நடந்த ஆர்பாட்டத்திற்க்கு ஆதரவளித்தோம்.' என்று கூறினார். ஆர்பாட்டத்தில் இஸ்லாமியர் இளைஞர்கள் சங்கம் (IIS) தலைவர் Aziz, செயலாளர் Rizwan Ahamed, துணை செயலாளர் Basith  உறுப்பினர்கள் Moideen, Azar, Abdul Rahim, Anis மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Friday 29 April 2011

குஜராத் கலவரம்-மோடி மீது உளவுத்துறை அதிகாரி பரபரப்பு புகார்

டெல்லி: 2002ம் ஆண்டு குஜராத் முழுவதும் 1200க்கும் அதிகமானோரை பலிவாங்கிய மதக் கலவரத்தில் முதல்வர் நரேந்திர மோடிக்கு பங்குள்ளது என மூத்த உளவுத்துறை போலீஸ் அதிகாரி உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


கலவரம் நடந்து 9 ஆண்டுகள் கழித்து மோடியின் மீது இந்தப் புகாரைக் கூறியுள்ள போலீஸ் அதிகாரியின் பெயர் சஞ்ஜீவ் பட். 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல்வர் நரேந்திர மோடி கூட்டிய போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் தான் கலந்து கொண்டதாகவும், அப்போது கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து வரும் போன்கள் அல்லது கலவரக்காரர்களைப் பற்றிய புகார்கள் எதையும் கண்டுகொள்ளாமல் இருக்கும்படி முதல்வர் மோடி தங்களுக்கு உத்தரவிட்டதாகவும் கூறியுள்ளார்.

இந்த கலவரம் குறித்து உச்ச நீதிமன்றத்துக்கு தான் அளித்த பிரமாணப் பத்திரத்தில் இதனைத் தெரிவித்துள்ளார் பட்.

அவர் மேலும், "நான் உள்பட 8 போலீஸ் அதிகாரிகள் மோடியின் அந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோம். அப்போது மோடி, மதக் கலவரத்தில் நடுநிலைமை காப்பது அவசியம் என்றாலும், இந்த முறை நிலைமை அப்படியில்லை. இனி இப்படியொரு கலவரம் நடக்கக் கூடாது எனும் வகையில் முஸ்லீம்களுக்கு கட்டாயம் பாடம் கற்றுத் தரவேண்டும். இந்துக்கள் மிகுந்த கோபத்திலும் ஆத்திரத்திலும் உள்ளனர். அந்த ஆத்திரத்துக்கு வடிகால் அவசியம்," என்றார். நான் இதை கலவரம் குறித்து விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வு படையிடம் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை," என்று தெரிவித்துள்ளார்.

ஆனால், அந்தக் கூட்டத்தில் சஞ்ஜீவ் பட் கலந்து கொள்ளவே இல்லை என்று மற்றொரு போலீஸ் அதிகாரி கூறியுள்ளார்.

முதல்வர் நரேந்திர மோடியிடம் இந்தக் கலவரங்கள் குறித்து கடந்த ஆண்டு இரு தினங்கள் விசாரணை மேற்கொண்டது சிறப்பு புலனாய்வு குழு. அப்போது தன் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மோடி மறுத்தது நினைவிருக்கலாம்.

Thursday 28 April 2011

ஒரு நிமிடம்....!

தமிழ் வழி கல்வி....!
தான் தரணி ஆழ தமிழனை இறையாக்கும் தமிழ் இன தலைவர்களின் தந்திரம்....!
தமிழன் குன்ற சட்டியில் குதிரை ஒட்டியது போதும்; உன் புகழ் ஊர் அல்ல உலகறிய வேண்டும்...!

உண்மையை சொன்னால் கசக்கும்...! நீ உயர்ந்தால் சில தலைவர்களுக்கு வலிக்கும்....!

இலவசம் தந்து உன்னை எமளியாக்கியவர்கள்....
உன்னிடம் இருப்பதை கொண்டு உன்னை உயரவைக்கவில்லையே...!

மேன்னாட்டு முதலீடாரை காசு வாங்கிக்கொண்டு, தமிழ் நாட்டை நந்த அரசு....

அங்கே வேலை வாய்பிற்கோ ... தமிழ் வழி கற்று வந்த தமிழனுக்கு தனி இடம் வேண்டாம்;
ஓர் தரை இடம் கூட வாங்கி தர முயலாதது ஏன்.....?

இவர்களின் சதிகளை சொல்லிகொண்ட போலாம்....

தமிழா முழிச்சிக்கோ...! தந்திர வலையில் இருந்து மீண்டு வா........!
பாரதம், கரகம் , கபடி...... போன்ற பல கலைகளை, உன் தனி திறமையை வளர்பதற்க்காக கற்றுக் கொள்கிறாய்;
அதை போல்.... பிற மொழிகளையும் உன் வளர்சிக்காக கற்றுக்கொள்...!

தமிழ் வழி கல்வி கற்று வயிற்றை கழுவதற்கு நாம் ஓலை சுவடி காலத்தில் இல்லை....

ஓவியம் தீட்டவே கணிப்பொறியை நாடும்.... கணினி யுகத்தில் இருக்கிறோம்....!

ஆங்கில வழி கல்வி தவரே அல்ல...

தமிழன் உலகிற்கே சவால் விட உதவிடும் கருவியாக,
ஆங்கில வழி கல்வியை ஏற்றுக்கொள்....! உன்னையே நீ உயைர்த்திக்கொள்...!

தமிழ் நாட்டின் தறுதலை தலைவர்களே....!

தமிழன் எழுந்து விட்டான்.....
தங்களின் தந்திர வலையில் இருந்து மீண்டு விட்டான்.....!

இனி....

எங்கள் ஆட்டம்..... உண்மையான தமிழர்களின் ஆட்டம்...!

-ரியாஸ் அஹமத் . அ

Wednesday 27 April 2011


Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More