இஸ்லாமியர் இளைஞர்கள் சங்கம்

PEACE PERSEVERANCE POWER

Sunday 18 September 2011

உள்ளாட்சித் தேர்தலுக்கான சின்னங்கள்


சென்னை, செப். 18: உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான சின்னங்களை மாநிலத் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

தேர்தல் நடைமுறைகளில் ஒன்றாக மாநிலத் தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் அந்தக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதைப்போல தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்ட ஆனால் அங்கீகரிக்கப்படாத கட்சிகளின் பட்டியலையும், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோருக்கான சுயேச்சை சின்னங்களின் பட்டியலையும் வெளியிட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், அவற்றின் சின்னங்கள்: (சின்னங்கள் அடைப்புக்குறிக்குள்)இந்திய தேர்தல் ஆணையத்தால் தேசியக் கட்சியாகவோ, அல்லது மாநிலக் கட்சியாகவோ அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளாகக் கருதப்படுகின்றன.

1. அதிமுக (இரட்டை இலை), 2. பகுஜன் சமாஜ் கட்சி (யானை) 3. பாஜக (தாமரை) 4. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (தானியக் கதிர்களும் அரிவாளும்) 5.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சுத்தியும், அரிவாளும், நட்சத்திரமும்) 6. தேமுதிக (முரசு) 7. திமுக (உதயசூரியன்) 8. இந்திய தேசிய காங்கிரஸ் (கை) 9. தேசியவாத காங்கிரஸ் (கடிகாரம்) 10. பாமக (மாம்பழம்)

பதிவு செய்யப்பட்ட-அங்கீகரிக்கப்படாத கட்சிகள்: மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், அகில இந்திய சமத்துவ கட்சி, புதிய தமிழகம், இந்திய குடியரசுக் கட்சி, புதிய நீதிக்கட்சி, எம்.ஜி.ஆர்.கழகம், அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழகம், ஜனதா கட்சி உள்ளிட்ட 154 கட்சிகள் இந்தப் பட்டியலில் உள்ளன. 

சுயேச்சை சின்னங்கள்: மாநகராட்சி மேயர், நகராட்சி, மூன்றாம்நிலை நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிக்குப் போட்டியிடுவோருக்கான சின்னங்கள்: 
 பதக்கம், கோட்டை, கேரம்போர்டு, கணிப்பொறி, மேசை மின்விசிறி, சீத்தாப்பழம், பேருந்து, குறுக்காக உள்ள இருகூர்வாள்கள், கோப்பையும் தட்டும், பளு தூக்குதல், சட்டை, சட்டைமாட்டி, ரயில் தண்டவாளம், பற்றுக்குறடு, சிறுபெட்டி, லென்சு கண்ணாடி, மட்டை, இரட்டை நாகஸ்வரம், கை பம்பு, பெல்ட், மை எழுதுகோல், சாய்வு மேசை, கைக் கடிகாரம், மைக்கூடு, வளையல்கள், பேட்டரி விளக்கு, பூந்தொட்டி, நீள மர இருக்கை, புத்தகம், டிஷ் ஆன்டனா.

மாநகராட்சி, நகராட்சி, மூன்றாம் நிலை நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய கவுன்சில் உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுவோருக்கான சின்னங்கள்: 
கிட்டார், பேட்ஜ், மறைதிருக்கி, வைரம், உலக உருண்டை, முகம் பார்க்கும் கண்ணாடி, அசைந்தாடும் நாற்காலி, புட்டி, ஊஞ்சல், நீளக்குவளை, சாலை உருளை, பூப்பந்து மட்டை, திருகு ஆணி, கோட்டு, கோப்பு அடுக்கும் அலமாரி, முள்கரண்டி, கெட்டில், ஹாக்கி மட்டையும் பந்தும், மகளிர் பணப்பை, மேசை விளக்கு, கொம்பு, கைப்பை, தீப்பெட்டி, கழுத்தில் கட்டும் டை, அலமாரி, குலையுடன் கூடிய தென்னை மரம், அரிக்கேன் விளக்கு, கரண்டி, தண்ணீர்க் குழாய், உலாவுவதற்கான தடி.சிற்றூராட்சித் தலைவர் பதவிக்குப் போட்டியிடுவோருக்கான சின்னங்கள்: பூட்டு மற்றும் சாவி, கத்திரிக்கோல், கை உருளை, ஏணி, மூக்குக் கண்ணாடி, கத்திரிக்காய், விமானம், கிணறு, மண்வெட்டி, பானை, தேங்காய் மூடிகள், மின்விளக்கு, மேசை, செல்போன், தொப்பி, திராட்சைக் கொத்து, வாழைப்பழம், ஹார்மோனியம், மின்விசிறி, சூரியகாந்திப் பூ, விளக்குக் கம்பம், ஹெலிகாப்டர், தையல் இயந்திரம், லாரி, பிளாஸ்க், சன்னல், மணிமாலை, சிலேட், ஸ்டூல், கரும்பலகை.

சிற்றூராட்சி உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுவோருக்கான சின்னங்கள்: 
திறவுகோல், சீப்பு, கட்டில், கார், சங்கு, பெயின்ட் பிரஷ், வானொலிப் பெட்டி, அஞ்சல்பெட்டி, ஸ்கூட்டர், தொலைபேசி, அன்னாசிப்பழம், நாற்காலி, கோப்பை, ரயில் எஞ்சின், பந்து, மோதிரம், வாளி, கண்ணாடி குடுவை, பட்டம், சுத்தி, சாக்லெட், குடிசை, சைக்கிள் ரிக்ஷா, மக்காச்சோளம், மாவரைக்கும் திரிகை, படகு, சாப்பாட்டுத் தூக்கு, சிம்னி விளக்கு, மரம், வண்டி.

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் விரும்பும் சின்னங்களைக் கோரும் முறை: 
1. சுயேச்சை வேட்பாளர் அவர் போட்டியிடும் பதவிக்காக ஒதுக்கப்பட்டுள்ள சுயேச்சை சின்னங்கள் பட்டியலில் இருந்து தான் விரும்பும் முன்னுரிமை வரிசைப்படி மூன்று சின்னங்களைப் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட வேண்டும்.
2. பதிவு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்படாத கட்சியின் சார்பில் நிற்கும் வேட்பாளர் அவர் விரும்பும் சின்னங்களை கட்சி அடிப்படையிலான தேர்லுக்கான சின்னங்களின் பட்டியலில் இருந்தும் ஒருங்கிணைந்தவாறு தேர்ந்தெடுத்துக் குறிப்பிடலாம். 

சின்னங்கள் ஒதுக்கீடு முறை 
வேட்பாளர் கோரிய முன்னுரிமை வரிசையின் அடிப்படையில் சின்னங்கள் ஒதுக்கீடு செய்ய பரிசீலிக்கப்படும்.

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்கப்பட்ட பின்னரே சுயேச்சை வேட்பாளருக்கு மீதமுள்ள சுயேச்சை சின்னங்கள் ஒதுக்கப்படும்.

ஒரே ஒருவரால் மட்டுமே முதல் தேர்வாக ஒரு சுயேச்சை சின்னம் கோரப்பட்டால், அந்தச் சின்னம் முதலில் கோரியவருக்கே ஒதுக்கீடு செய்யப்படும். பிறருக்கு ஒதுக்கீடு செய்யப்படமாட்டாது.
ஒன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் தங்கள் முதல் தேர்வாக ஒரே சின்னத்தைக் கோரியிருந்தால், அந்தச் சின்னம் குலுக்கல் முறையில் ஒருவருக்கு ஒதுக்கப்படும்.

வேட்பாளர் கோரிய முதல் விருப்பச் சின்னம் அவருக்கு ஒதுக்கீடு செய்ய இயலாது போனால், இரண்டாவது கோரிய சின்னம் பரிசீலிக்கப்படும். இரண்டாவது சின்னமும் பலரின் கோரிக்கைகளினால் ஒதுக்கீடு செய்ய முடியாமல் போனால் மூன்றாவது விருப்பச் சின்னம் பரிசீலிக்கப்படும். 

மூன்றாவதாக கோரிய சின்னமும் ஒதுக்கீடு செய்ய முடியாமல் போனால் பிற வேட்பாளர்களுக்கு ஒதுக்கியதுபோக மீதமுள்ள சுயேச்சை சின்னங்களில் ஒன்று குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு ஒதுக்கப்படும்.

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More